stitcherLogoCreated with Sketch.
Get Premium Download App
Listen
Discover
Premium
Shows
Likes
Merch

Listen Now

Discover Premium Shows Likes

SBS Tamil - SBS தமிழ்

500 Episodes

13 minutes | May 28, 2023
குளிர்காலத்தில் நம்மை நெருங்கும் நோய்களை துரத்துவது எப்படி?
குளிர் காலத்தில் நாம் குளிரிலுருந்து தப்பித்தாலும் சில நோய்களிலிருந்து சிலரால் தப்ப முடியாது என்று நாம் நினைக்கலாம். ஆனால் தப்பிக்கலாம் என்றும் எப்படி தப்பிப்பது என்றும் வாங்க பேசலாம் நிகழ்ச்சி வழியாக விளக்கியவர் மருத்துவர் நிர்மலா கிருஷாந்த் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
9 minutes | May 28, 2023
Man pleads guilty to murder of Adelaide aged care worker Jasmeen! - தெற்கு ஆஸ்திரேலியாவில் இந்தியப்பெண் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன?
The family of a nursing student brutally murdered in South Australia have expressed their grief during harrowing victim impact statements in court. Jasmeen Kaur, 21, was kidnapped from her aged care workplace in North Plympton in 2021 and driven to Hawker in the Flinders Ranges, where she was murdered and buried in a shallow grave. Renuka presents a special report. - ஆஸ்திரேலியாவில் பேசுபொருளாகும் முக்கிய செய்தியொன்றின் விரிவான பின்னணி ஒவ்வொரு மாதமும் SBS தமிழ் ஒலிபரப்பில் ஒலிக்கிறது. அந்தவகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ஆஸ்திரேலியாவில் இந்தியப்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் வெளியாகியுள்ள பிந்திய விவரங்களை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
8 minutes | May 28, 2023
இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழக செங்கோலின் பின்னணி என்ன?
இந்தியாவில் பலநூறு கோடி ரூபாய் செலவில், பிரமாண்டமாக தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இந்திய குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும், மே 28 ஆம் தேதி சாவர்க்கரின் பிறந்த நாள் என்பதால் தேதியை மாற்ற வேண்டும் என்றும் மற்றும் செங்கோல் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த பின்னணியில் செங்கோல் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் நம்மிடையே பேசுகிறார் தமிழ் ஆர்வலரும் அரசியல் விமர்சகருமான பாலசந்தர். அவரோடு உரையாடியவர் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
9 minutes | May 28, 2023
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் சிட்னி விமானநிலையத்தில் கைது
ஆஸ்திரேலிய செய்திகள்: 28 மே 2023 ஞாயிற்றுக்கிழமை வாசித்தவர்: றைசெல்
6 minutes | May 27, 2023
Vivid Sydney கோலாகலமாக துவங்கியது
ஆஸ்திரேலிய செய்திகள்: 27 மே 2023 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்
7 minutes | May 27, 2023
Government defends energy price rises as PWC scandal deepens - மின்சார விலை உயர்கிறது !! மறுபுறம் வரி ஏய்ப்பு விசாரணையும் தொடர்கிறது !!
The Australian Energy Regulator has confirmed people will see a spike in electricity prices, but the government says its intervention has prevented the worst of the increase. Senate estimates has also grilled government officials over the leak of confidential tax information by a former PwC employee. In English : Soofia Tariq ; In Tamil : Selvi - எதிர்வரும் ஜூலை முதலாம் தேதி முதல் மின்சார கட்டணம் உயர உள்ளது. அதேவேளை மறுபுறம் வரி ஏய்ப்பு குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் SBS News - இற்காக Soofia Tariq எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
18 minutes | May 26, 2023
TSS Visa Subclass 482 - Everything You Need To Know - TSS விசா ஊடாக ஆஸ்திரேலியாவில் குடியேறுவது எப்படி?
The TSS visa is a temporary visa which permits the holder to live in Australia, while working full-time for the sponsoring employer, in the nominated position. Lawyer and Migration agent Mariyam explains more about TSS visa. Produced by Renuka. - ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வழிமுறைகளில் ஒன்று TSS விசாவுடன் இங்கு வந்து பின்னர் அதனூடாக நிரந்தர வதிவிடம் பெறுவதாகும். TSS விசா குறித்து சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் மெல்பனில் சட்டத்தரணி மற்றும் குடிவரவு முகவராக கடமையாற்றும் திருமதி மரியம். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
7 minutes | May 26, 2023
14 வருடங்களாக நீதிக்காக ஏங்கும் மக்கள்
யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துவிட்டன. யுத்தம் ஏற்பட்டமைக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை . இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் இடம்பெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. மட்டுமல்ல, யுத்தம் முடிந்தாலும் காணி அபகரிப்பு , பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இன்றும் தொடர்வதாக குற்றம்சாட்டப்படுகிறது.
8 minutes | May 26, 2023
திறமையான பணியாளர்களை இலகுவாக அனுமதிக்க - ஆஸ்திரேலியா இந்தியா இடையே ஒப்பந்தம்
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/05/2023) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர் செல்வி.
12 minutes | May 26, 2023
We all can be a Voice for Generations - பல தலைமுறைகளுக்காக நாங்களும் குரல் கொடுக்கலாம்
National Reconciliation Week is a time for all Australians to learn about our shared histories, cultures, and achievements, and to contribute to reconciliation by building better relationships with Aboriginal and Torres Strait Islander people. - இந்நாட்டில் வாழும் அனைவரும் இந்நாட்டின் பகிரப்பட்ட வரலாறுகள், கலாச்சாரங்கள் மற்றும் சாதனைகள் பற்றி அறிந்து கொள்வதற்கும், பூர்வீகக்குடி மக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்திற்குப் பங்களிப்பதற்கும் சந்தர்ப்பம் National Reconciliation Week - தேசிய நல்லிணக்க வாரம்.
6 minutes | May 25, 2023
சிட்னியின் மத்திய ரயில் நிலையத்திற்கு அருகில் பாரிய தீ அனர்த்தம்
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 25/05/2023) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
10 minutes | May 24, 2023
Is US dollar's dominance declining? - உலகின் No 1 நாணயம் அமெரிக்க டாலர் என்ற மதிப்பை அது இழக்கிறதா?
In recent years, several factors led to a questioning of the dollar’s dominance. Many countries started using their currencies for trading with other countries. Some economists argue US dollar’s dominance is declining. Explains, R Sathyanathan, a veteran broadcaster. Produced by RaySel. - உலகின் நாணயம் அமெரிக்க டாலர் என்ற தகுதியை அமெரிக்க டாலர் இழக்கும் அபாயத்தை சந்திப்பதாக பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பின்னணியை விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
13 minutes | May 24, 2023
International Tea Day - தேயிலை மற்றும் அதனை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களை கொண்டாட ஒரு தினம்
Tea is a beverage made from the Camellia sinesis plant. Tea is the world’s most consumed drink, after water. Tea has been with us for a long time. There is evidence that tea was consumed in China 5,000 years ago. International Tea Day is observed annually on May 21. This feature explains more about tea it's history and health benefits. - மே 21ஆம் தேதி சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்பட்டது. தேயிலையின் மருத்துவ குணம் மற்றும் ஆரோக்கியமான முறையில் எவ்வாறு தேநீர் தயாரிப்பது என்று பரிஸ்பனில் வசிக்கும் சித்த மருத்துவர் டாக்டர் செல்வி மணி அவர்கள் வழங்கும் தகவல்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
7 minutes | May 24, 2023
Rapturous reception for Narendra Modi - மோடிக்கு உற்சாக வரவேற்பும், மனித உரிமைகள் தொடர்பிலான எதிர்ப்பும்
Thousands of members of Australia's Indian community gathered in Sydney's west to welcome India's Prime Minister Narendra Modi. Mr Modi will sit down with his Australia counterpart, Anthony Albanese, today [[WED 24 MAY]], for bilateral talks. That story by Catriona Stirrat, Naveen Razik and Allan Lee for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil. - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க மேற்கு சிட்னியில் Qudos Bank Arenaவில் நேற்று புதன்கிழமை, ஆயிரக்கணக்கான இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றுதிரண்டனர். பிரதமர் Anthony Albanese மற்றும் இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் இன்று இருதப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். Catriona Stirrat, Naveen Razik மற்றும் Allan Lee தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
5 minutes | May 24, 2023
சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு ஒன்பது நாள் பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ’உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்’ கலந்துகொள்ளும்படி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு ஒன்பது நாள் அரசு முறைப் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ளார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
4 minutes | May 24, 2023
'பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஜாதி வெறி' - எஸ்.வி.சேகர்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கடுமையான விமர்சனங்களை பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படும் நடிகர் எஸ்.வி.சேகர் முன்வைத்து வருகிறார். பாஜகவின் தலைவர்களே ஒருவரை ஒருவர் விமர்சித்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
8 minutes | May 24, 2023
ஆஸ்திரேலிய, இந்திய பிரதமர்கள் இரண்டு பொருளாதார ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 24/05/2023) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
12 minutes | May 23, 2023
Caring for carers: How to access carer support services in Australia - ஆஸ்திரேலியாவில் பராமரிப்பாளர்களுக்கான உதவிகளை எவ்வாறு பெறுவது?
About one in nine people in Australia are carers — people who look after an ageing or frail relative or friend, or for someone living with a health condition or disability. But many carers do not recognise themselves as such, or know there is a range of free support services available to them. - ஆஸ்திரேலியாவில் ஒன்பது பேரில் ஒருவர் பராமரிப்பாளர்களாக இருக்கிறார்கள். வயதான அல்லது பலவீனமான உறவினர் அல்லது நண்பர் அல்லது உடல்நலம் குன்றிய அல்லது மாற்றுத்திறனாளியான ஒருவரைப் பார்த்துக்கொள்பவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.
6 minutes | May 23, 2023
சிட்னியில் இந்தியப் பிரதமரை வரவேற்க மாபெரும் நிகழ்வு! ஆஸ்திரேலியப் பிரதமரும் பங்கேற்பு!!
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 23/05/2023) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர் றேனுகா
7 minutes | May 22, 2023
மலையகம் 200 - சிறப்பு நிகழ்வு
இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு குடியேறி 200 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் மற்றும் மலைய மரபுரிமை இணைந்து நுவரெலியாவில் மலையக மக்களின் வரலாற்றை நினைவு கூரும் வகையில், இம் மக்கள் இன்று எதிர்கொள்ளும் சமூக, அரசியல், கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட அடிப்படை பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கண்காட்சிகளோடு பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. "மலையகம் 200" என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வுகள் வெள்ளி தொடங்கி ஞாயிறு வரை இடம்பெற்றுள்ளன. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
COMPANY
About us Careers Stitcher Blog Help
AFFILIATES
Partner Portal Advertisers Podswag Stitcher Studios
Privacy Policy Terms of Service Your Privacy Choices
© Stitcher 2023